அச்சிடுக

மிக ஆரம்பத்திலிருந்தே B.E.S.T. இல் எமது பிரதான இரு இலக்குகளாவன: எமது மாணவர்க்கு சாத்தியமான மிகச்சிறந்த வசதிகளை வழங்குவது மாத்திரமன்றி, மாணவர்க்கும் பெற்றோருக்கும் பொருத்தமான ஆசிரியரைத் தேடுவதற்கு ஏற்படும் அசௌகரியங்களையும், மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட போன்ற இடங்களுக்குப் பயணிப்பதற்கு ஏற்படும் செலவுகளையும் தவிர்ப்பதாகும். இதற்காகவே B.E.S.T. ஆனது றோயல், ஆனந்தா, மகளிர் கல்லூரி, தேவி பாலிகா, பிப், டீ. எஸ். சேனாநாயக்க, லைசியம் மற்றும் பல முன்னணிக் கல்லூரிகளிலிருந்து அனுபவமும் ஆழ்ந்த அறிவுமுடைய ஆசிரியர் குழாமொன்றை அமைத்துள்ளது. அனைவரும் உங்களுக்குச் சேவையாற்ற மிகவும் ஆர்வமாகவும், இலகுவாக அணுகக்கூடிய வகையில் நெருக்கமாகவும் உள்ளனர்.

உன்னதமான வசதிகளோடும் மதிப்புக்குரிய ஆசிரியர்களுடனும் சேர்த்து பரந்தளவிலான 135 வெவ்வேறு பாட வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் நடைபெறுகின்றன. சிறுவர்களுக்கான முதலாம் வகுப்பு முதல் க. பொ. த. சாதாரண தர மற்றும் உயர்தர பாடசாலைப் பாடவிதானத்துக்கு அமைவான வகுப்புகள் வரை சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலம் இடம்பெறுவதேடு, தொழில்சார் தகவல் தொழிநுட்பப் பயிற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் கல்வி கற்கவும் தொழில்புரியவும் விரும்புவோருக்கான ஆங்கிலத் தகைமையான வகுப்புகள் வரையும் நடைபெறுகின்றன.

இத்தகைய முறைசார் கல்வி மற்றும் தொழில்சார் வகுப்புகளுக்கு மேலதிகமாக வயது மற்றும் பால் வேறுபாடுகளின்றி அனைவருக்குமான கற்கைநெறிகள் B.E.S.T இல் நடாத்தப்படுகின்றன. உங்களது உடலை உறுதியாக வைத்திருக்க உதவும் வௌ;வேறு வகையான பயிற்சிகள்: யோகா, உடற்பயிற்சி, நடனம் மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட, கண்ணாடி பதிக்கப்பட்ட பயிற்சிக்கூடத்தில் ஒவ்வொரு பிரிவிலும் துறைசார் அறிஞர்களாளும் தேசிய தொலைக்காட்சியில் புகழ்பெற்ற விரிவுரையாளர்களாலும் நடாத்தப்படுகின்றன.

ஆகவே எங்கு கற்பது என்ற உங்கள் இறுதி முடிவை எடுக்க முன்னர் ஒரு முறை B.E.S.T. ஐ வந்து பார்க்குமாறு மாணவரையும் பெற்றோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதன்போது B.E.S.T. இல் உண்மையாக என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை அறிந்த பின்னர் நீங்கள் திருப்திகரமானதும் சரியானதுமான கல்வித் தெரிவொன்றை நீங்கள் மேற்கொள்வீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

உங்களது இலக்குகளையும் இலட்சியங்களையும் அடைந்துகொள்ள உதவுவதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்

முகமைத்துவ அணி,

B.E.S.T.


.