அச்சிடுக
B.E.S.T. இல் சர்வதேசக் கற்கைகள்

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி பெறுவதென்பது அதி உயர் சித்திகளைப் பெறும்போது கூட கடினமானது என்பது துரதிஸ்டவசமான உண்மையாகும். பல்கலைக் கழகங்களில் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்குப் போதிய வெற்றிடங்கள் கானப்படவில்லை. ஏனினும் B.E.S.T. இல் நாங்கள் இதுவே மாணவர்களது சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கைகளினதும் கனவுகளினதும் முடிவாக  இருக்கக் கூடாது என்று நம்புகின்றோம். உலகின் ஏனைய பாகங்களில் வாய்ப்புகள் உள்ள போது இது முடிவாக அமையாது.  

இதற்காகவே B.E.S.T. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடனும் கல்லூரிகளுடனும் முறையான தொடர்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வகையான தொடர்புகள் இளமாணி, முதுமாணி அல்லது அதற்கும் அப்பால் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு உதவ எங்களுக்குத் துணைசெய்கின்றன. அது மேற்கு அல்லது கிழக்கு ஐரோப்பாவாகவோ, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியாவாகவோ உலகின் எந்த நாடாக இருப்பினும் B.E.S.T. ஒரு மாணவரை அவரது சொந்தச் சூழ்நிலைகளுக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கும் பொருத்தமான சரியான பாதையில் வழிநடத்த மிகவும் முயற்சி செய்யும்.


விமானப் பொறியியல் முதல் விலங்கியல் வரை எந்தப் பிரிவாக இருப்பினும் பொருத்தமான சர்வதேசமெங்கும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தராதரங்களை அடைய உதவும் கற்கைநெறிகளை கண்டறிய எங்களால் முடியும். அநேக சந்தர்ப்பங்களில் இத்தகைய கற்கைநெறிகள் செலவைக் குறைக்கத்தக்க வழிகளில் பெற்றோருக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கக் கூடியவாறு கற்கத் தக்கதாக அமையும்.

அநேக பெற்றோர்கள் சர்வதேச கல்லூரி அல்லது பல்கலைக்கழக அனுமதியானது சிறந்த க. பொ. த. சாதாரண தர அல்லது உயர்தரப் பெறுபேறுகளில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை என்பதை உணர்கிறார்களில்லை. உதாரணமாக அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் கல்லூரியொன்றில் நடாத்தப்படும் ஒரு வருட அடிப்படைப் பாடநெறியானது உறுதியாக சிறந்த பல்கலைக்கழக அனுமதிக்கு வழிவகுக்கும். இது அதி சிறந்த ஐவி லீக் பல்கலைக்கழக அனுமதியாகக் கூட அமையலாம். ஆரம்பத்தில் தேவையானது ஒரளவு திருப்தியான க. பொ. த. சாதாரண தரப் பெறுபேறுகளே ஆகும்.

இதனாலேயே நாம் பெற்றோரையும் மாணவர்களையும் மிகத் தீவிரமாகச் சிந்திக்கும்படி கேட்பது என்னவென்றால், இலங்கையில் க. பொ. த உயர்தரப் பெறுபேறுகளைப் பெறுவதற்காக பல்கலைக்கழக அனுமதி தொடர்பான உறுதிப்பாடு ஏதும் அற்ற நிலையில் இரண்டு வருடங்களைக் கழிப்பதா அல்லது வெளிநாடு சென்று பல்கலைக்கழக அனுமதிக்கான உறுதிப்பாட்டுடன் கல்வி கற்பதா என்பதையே.

எனவே காலம் கடந்துவிட முன்னர் அல்லது அனர்த்தகரமான பிழையான முடிவொன்றை நீங்கள் எடுத்துவிட முன்னர் அனைத்து மாணவர்க்கும் அவர்தம் பேற்றோருக்கும் நாம் பரிந்துரைப்பது என்னவென்றால் நீங்கள் க. பொ. த. சாதாரண தரத்தைப் பூர்த்தி செய்யும் முன்னர் குறைந்தது B.E.S.T. இல் எமது சர்வதேச கல்வி ஆலோசகருடன் ஒருமுறை கட்டாயம் பேச வேண்டும். இதன்போது உண்மையாக உங்களுக்குள்ள கல்வி வழிமுறைகள் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தற்போது உங்கள் குழந்தை B.E.S.T. இல் சேர்ந்திருக்காவிடினும் எங்களை நீங்கள் தயக்கமின்றித் தொடர்பு கொள்ளலாம். எமது சர்வதேச கல்வி ஆலோசகர் உங்களது குழந்தையின் சிறந்த எதிர்காலத்துக்கான கல்வித் தெரிவை மேற்கொள்ள உங்களுக்கு உதவ முயற்சிப்பார்.





.